முகப்பு

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை குறித்து...

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நீதிமன்றம் மறுப்பு
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் மறுப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்ததாக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது காவல் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, தமிழ்நாடு அரசு 4 போ் கொண்ட ‘உள் விசாரணைக் குழு’ அமைத்துள்ளது.

இதனிடையே, எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு வியாழக்கிழமையில் (நவ. 26) மனு தாக்கல் செய்தார்.

Advertisement

Advertisement

திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு தாக்கல் செய்த மனு, இன்று உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, "தவெக எம்எல்ஏ மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை. தமிழக காவல்துறையே திறமையான அமைப்புதான். தமிழக காவல்துறையில் திறமையான அதிகாரிகள் உள்ளனர். சிபிஐ விசாரணை கோரும் வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், தமிழகத்தில் சிபிஐ கிளைதான் அமைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

summary

Kallakurichi TVK MLA issue: High Court refuses to transfer investigation to CBI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.