அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கைப்பேசி பயன்படுத்தத் தடை!
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கைப்பேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது, கைப்பேசியை சட்டைப்பையில் வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்து ஓட்டுநர்களுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”பேருந்து இயக்கத்தின்போது ஒட்டுநர்கள் கைப்பேசி வைத்திருக்க கூடாது மற்றும் உபயோகப்படுத்த கூடாது என சுற்றறிக்கை வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இருப்பினும் ஒட்டுநர்கள் சட்டைப்பையில் கைப்பேசி வைத்திருப்பதாகவும் அவ்வப்போது பணியின்போது பயன்படுத்தி வருவதாகவும் பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஒட்டுநர்கள் பணியின்போது, கைப்பேசியை பயன்படுத்தி வருவதால் அவ்வப்போது உயிரிழப்பு மற்றும் பெரிய விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசியை சட்டைப்பையில் வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது.
மேலும், பேருந்து நிலையம் மற்றும் வழித்தட ஆய்வின்போது, ஓட்டுநர்கள் கைப்பேசி வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஓட்டுநர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றறிக்கை வாயிலாக மீண்டும் நினைவூட்டப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Government bus drivers are strictly prohibited from keeping mobile phones in their shirt pockets or using them while on duty.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.