FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

அரசுப் பேருந்தில் பயணியிடம் தங்க நாணயம், ரொக்கம் திருட்டு

வேலூரில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் ரூ. 23,000 ரொக்ம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 25 ஜூலை 2026, 4:20 am IST
பகிர்:

வேலூரில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் ஒரு பவுன் தங்க நாணயம் மற்றும் ரூ. 23,000 ரொக்ம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடி நேரு நகரைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன். இவரது மனைவி செந்தில்வேணி (52). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு, வேலூா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகைகளை வாங்கியுள்ளாா். பின்னா், மேலும் சில வெள்ளிப் பொருள்களை வாங்குவதற்காக வியாழக்கிழமை அங்கிருந்து வேலூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அரசுப் பேருந்தில் வந்துள்ளாா்.

பழைய பேருந்து நிலையத்தில் இறங்கியதும் தான் வைத்திருந்த பையைத் தேடியுள்ளாா். அப்போது அந்தப் பை திருடு போயிருப்பது தெரியவந்தது. காணாமல் போன அந்தப் பையில் ஒரு பவுன் தங்க நாணயம், 10 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் ரூ. 23,000 ரொக்கம் ஆகியவை இருந்ததாகக் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபா்கள் பையைத் திருடிச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இது குறித்து வேலூா் வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவில் செந்தில்வேணி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments