பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: மு.க. ஸ்டாலின் கண்டனம்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது பற்றி...
பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உள்பட10 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றது.
சிஎம்ஆர்எல் கனிமவள நிறுவனத்துடன் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் பினராயி விஜயனுக்குச் சொந்தமான கண்ணூர், திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் திடீரென இந்தச் சோதனை நடைபெற்று வருகின்றது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக, தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட பதிவில், “கேரள முன்னாள் முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய அமைப்புகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
”பினராயி விஜயனை ஏன் இன்னும் பாஜக குறி வைக்கவில்லை?" என்று தொடர்ந்து கேள்வி எழுப்பிய சில காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளின் உள்ளீடற்ற தன்மையையும் இது அம்பலப்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.