தமிழ்நாட்டில் அடுத்த மாதமும் வெப்ப அலை வீசும்: வானிலை எச்சரிக்கை!
அடுத்த மாதமும் வெப்ப அலை வீசுவது பற்றி வானிலை கூறுவது..
தமிழ்நாட்டில் ஜூன் மாதமும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தழிழ்நாட்டில் இந்தாண்டு கோடை வெய்யில் கொளுத்திவரும் நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெய்யில் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நேற்று (ஜூன் 28) நிறைவடைந்தது. கத்திரி வெய்யில் காலம் முழுவதும் கடுமையான வெப்பம் தகித்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெய்யில் சதம் அடித்தது. ஒரு சில இடங்களில் 110 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.
மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் அதீத வெப்பம் சுட்டெரித்ததால் குழந்தைகள், முதியோர்கள், வெளியில் வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர். வெப்ப அலையால் மயக்கம், வாந்தி, வெப்ப பக்கவாதம் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் உள்ளாகினர்.
Advertisement
Advertisement
குறிப்பாகப் பகல் நேர வெப்பநிலையால் வாகன ஓட்டுகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பகலில் உச்சம்தொடும் வெப்பத்தின் தாக்கத்தால், இரவு முழுவதும் புழுக்கத்தை ஏற்படுத்திய நிலையில் மக்கள் உறங்க முடியாமல் தவிர்த்தனர்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடந்த 25 நாள்களாகவே பல இடங்களில் கத்திரி வெய்யில் வாட்டி எடுத்தது. அக்னி நட்சத்திரத்தின் கடைசி நாளான நேற்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெய்யில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் அதிகட்சமாக 106 டிகிரி வெய்யில் பதிவானது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் ஓரிரு நாள்களுக்கு 2 - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். சென்னையில் வெய்யிலின் தாக்கம் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிகமாக இருக்கும். அதன்பிறகு வெய்யில் படிப்படியாகக் குறையும்.
கொளுத்தும் வெய்யில் மே மாதத்தோடு முடியாது, ஜூன் மாதமும் அக்னி ஜூவாலைகள் கொடூரமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேசமயம் தாமதமாகத் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு 94 சதவீதம் மட்டுமே பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Meteorological Department has issued a warning that a heatwave will persist in Tamil Nadu during the month of June.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.