மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் ஊசலாட்டம் கூடாது: தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்
மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசு நிலையாக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசு நிலையாக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக!
'ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும்' என்பது சட்ட மேதை அம்பேத்கரின் மணிவாசகங்களில் ஒன்று.
Advertisement
Advertisement
மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று பெறப்பட்டுள்ள தீர்ப்பைச் செயல்படுத்த தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசு முன்வர வேண்டும்.
மாநிலங்களில் அரசு மாறலாம், ஆனால் மாநில உரிமைகள் என்பதும், கூட்டாட்சி என்பதும் அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகளாகும். இதில் சமரசத்துக்கு இடமில்லை.
மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசுக்கு ஊசலாட்டம் கூடாது" என்று கூறியுள்ளனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதை எதிர்த்து, தஞ்சை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் மாநில அரசு ஊசலாட்டம் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளனர்.
No Wavering in Upholding State Rights: CPI(M) Urges TVK Government
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.