பிரசாரத்தில் பஞ்ச் டயலாக் பேசிய விஜய் இப்போது 'ஸ்லீப் மோடு'க்குச் சென்றுவிட்டார்! உதயநிதி
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு குறித்து தவெக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி...
சட்டம் - ஒழுங்கு பற்றி பிரசாரத்தில் பஞ்ச் டயலாக் பேசிய விஜய், முதல்வரானதும் ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
Advertisement
Advertisement
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச் சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் - ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த சோஃபா மாடல் அரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரசாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் - ஒழுங்கு பத்தி வாய்கிழிய பஞ்ச் டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode (ஆழ்ந்த உறக்க நிலை)-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப் பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform( சீருடை)-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் - ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார்" என்று பதிவிட்டுள்ளார்.
Leader of Opposition Udhayanidhi questions TVK govt regarding law and order in Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.