திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகம் கோலாகலம்!
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா பற்றி...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் முதன்மையான வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக விழா கடந்த 21-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
Advertisement
Advertisement
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வும்,
அங்கு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளும் நிகழ்வும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று வைகாசி விசாகத்தையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து வரத் துவங்கினர்.
அதிகாலை 5.30 மணிக்கு ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சண்முகர் சன்னதியில் இருந்து புறப்பாடாகி காலை 6 மணிக்கு சுவாமி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு திருப்பரங்குன்றம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலையில் சுமந்துவந்த குடங்களில் இருந்த பால் கொண்டு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பக்தர்கள் பால், இளநீர், பன்னீர், மயில், புஷ்பம், பறவை காவடிகள் எடுத்து வந்தனர். ஏராளமானோர் 12 அடி அகலம் கொண்ட வேலால் அலகு குத்தியும், ஏராளமானோர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வந்தும் சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
500 - க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Vaikasi Visakam Celebrated at Thiruparankundram Murugan Temple
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.