FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும்!

ரேஷன் கடைகள் இன்று வழக்கம்போல் செயல்படுவது குறித்து...

6 நவம்பர் 2026, 7:29 am
தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும்... - பிரதிப் படம்
பகிர்:

தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் வெள்ளிக்கிழமை (நவ. 6) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கு ஏதுவாக மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நவ. 6-ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

summary

Ration shops will function as usual today