FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னைக்குள் நுழைந்த கடைசி மேகக்கூட்டம்... தீபாவளியைக் கொண்டாட வழிவிட்ட மழை!

சென்னையில் படிப்படியாக மழை குறையும்.

மழை - படம்: தினமணி
பகிர்:

சென்னையில் நுழைந்துள்ள மேகக் கூட்டங்களால் சிறிது நேரம் மழை இருக்கும்; அதன் பின்னர், மழைக்கான பாதிப்பு ஏதும் இருக்காது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (நவ. 8) காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், பாடி, கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், பேசின்பாலம், பாரிமுனை, கிண்டி, தியாகராய நகர், நுங்கம்பக்கம், எழும்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

மேலும் தாம்பரம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்பட புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் மழை நிலவரம் தொடர்பாக, தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

”சென்னைக்குள் கடைசி மேகக்கூட்டம் நுழைந்துள்ளது. இந்த மழை பெய்தபிறகு, தீபாவளியை கொண்டாடுவதற்கு ஏதுவாக நல்ல இடைவெளி கிடைக்கும், இரவு வரை பெரிய அளவில் மழை இருக்காது.

நாளை (நவ. 9) காலை மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு, சென்னையில் 4 முதல் 5 நாள்களுக்கு மழை இருக்காது. அதன் பிறகு, அவ்வப்போது மழை இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

பிற மாவட்டங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்த விளக்கம் விரைவில் வெளியிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Private weather forecaster Pradeep John has stated that while rain is expected for a short while due to cloud clusters moving into Chennai, there will be no further impact from rain thereafter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.