FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!

தீபாவளியன்று காவல்துறை அதிகாரி, சிறுவர்கள், இளம்பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளது குறித்து சிபிஎம் கருத்து...

கொலை நடந்த இடத்தில் காவல் துறை விசாரணை / பெ. சண்முகம் - எக்ஸ்
பகிர்:

தமிழ்நாட்டில் குற்றச்செயல்களுக்கும் போதைக் கலாசாரத்திற்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''தமிழ்நாட்டில் தீபாவளியான நேற்று, ஒரே நாளில் காவல்துறை அதிகாரி, சிறுவர்கள், இளம்பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இது தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட நிகழ்வுகள் என்று இவற்றை புறந்தள்ளி விட முடியாத அளவுக்கு பரவலாக நடந்துள்ள இந்த குற்றச்செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

பொதுமக்கள் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கும், போதைக் கலாசாரத்திற்கு முடிவு கட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

11 murders in a single day: CPM urges strict action

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.