மக்களுக்கு துரோகம் செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டி: சிபிஎம்
மக்களுக்கு துரோகம் செய்தவர்களே மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர் என சிபிஎம் தெரிவித்தது குறித்து...
மக்களுக்கு துரோகம் செய்தவர்களே மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்யபாமா ராஜிநாமா செய்துவிட்டு, கட்சி மாறிய காரணத்தால் தற்போது இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடுகின்றனர்.
இதுதொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது:
Advertisement
Advertisement
தவெகவின் சார்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஏற்கெனவே அவர்களை நம்பி மக்கள் வாக்களித்தனர். வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில், 20 நாள்களுக்குள் விரலில் வைத்த மை அழிவதற்கு முன்பாக, அவர்கள் வேறொரு கட்சியிலே சேர்ந்தது என்பது வாக்களித்த மக்களுக்கு இழைத்த துரோகம்.
அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஆகவே, அதே நபர்கள் மீண்டும் நிறுப்பப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இங்கிருந்து மீண்டும் வேறொரு இடத்துக்கு போகமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
எந்தக் காரணத்துக்காக, எதை எதிர்பார்த்து அங்கே சேர்ந்தார்கள் என்ற விளக்கத்தை அவர்கள் தர வேண்டும். ஆகவே, தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு அந்த வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? என்பதை மக்களிடம் முன்வைப்போம் என்று பெ. சண்முகம் தெரிவித்தார்.
P. Shanmugam, the Tamil Nadu State Secretary of the Communist Party of India (Marxist) [CPI(M)], stated that those who betrayed the people are the ones contesting the by-election again.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.