FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு.

59 வினாடிகள் முன்பு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப்படம்
பகிர்:

தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டியிடவுள்ளதக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மு. வீரபாண்டியன் தெரிவித்ததாவது:

”பாஜகவின் மறைமுக ஆட்சி வந்துவிட கூடாது என்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தவெகவை வெளியில் இருந்து ஆதரவு அளித்தது.

Advertisement

Advertisement

2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இயல்பானது இல்லை, மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்ற அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.

இடைத்தேர்தலை எதிர்கொள்வது என்ற முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே முடிவை எடுத்துள்ளது. இதை அவர்கள், எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள்.

தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தக் கட்சியின் மாநில செயலர் பெ. சண்முகம் அறிவிப்பார்.

இடதுசாரிகள் கூட்டணிக்கு ஜனநாயக சக்திகள் ஆதரவு அளிக்க வேண்டும். எங்களுக்கு வாய்ப்பு அளித்தால் ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் குரலை, தமிழ் மக்களின் நலன் சார்ந்த குரலை சட்டப்பேரவையில் எழுப்போம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, லெனினிஸ்ட் கட்சிகள் ஒன்று சேர்ந்து வேட்பாளர்களை வரும் செப். 15 ஆம் தேதி அறிவிப்போம்” என்றார்.

summary

M. Veerapandian, State Secretary of the Communist Party of India (CPI), has announced that the CPI will contest in Dharapuram and the CPM in Maduranthakam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments