FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் என சிபிஎம் கட்சி வலியுறுத்தியுள்ளது குறித்து...

19 அக்டோபர் 2026, 4:43 pm IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம். - கோப்புப் படம்
பகிர்:

சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் திங்கள்கிழமை (அக். 19) வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதும் அதையொட்டி வெள்ளத்தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து தீவிரமாக விவாதிப்பதுமாக ஒவ்வொரு ஆண்டும் கடந்து கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, ஆட்சியர் திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆயினும், அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை.

Advertisement

Advertisement

அந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டுமென்று கடந்த காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வந்துள்ளன. இடைக்கால அறிக்கைகள் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை இந்த குழு சமர்ப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அறிக்கை பல்வேறு கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் மற்றும் வசதிபடைத்தோரின் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதும் முக்கியமானது என்று சொல்லப்பட்டிருப்பதால் இந்த அறிக்கை வெளியிடப்படாமல் தடை செய்யப்பட்டிருக்கிறதோ என்கிற கேள்வியும் எழுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்படாத அந்த அறிக்கையை தற்போதைய ஆட்சியிலாவது வெளியிட வேண்டும். மக்களின் வரிப்பணத்தை செலவழித்து நிபுணர்கள் தங்கள் உழைப்பையும், அறிவையும் செலுத்தி உருவாக்கப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு என்ன தடை இருக்க முடியும்.

எனவே, மாநில அரசாங்கம் உடனடியாக திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் மிகவும் அவசர, அவசியமான தேவை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

summary

Communist Party of India (Marxist) State Secretary P. Shanmugam on Monday (Oct. 19) urged the release of the Chennai flood prevention report without delay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments