மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு: நவ.11 நிலவரம்!
மேட்டூா் அணைக்கு புதன்கிழமை காலை நீா்வரத்து 3,722 கனஅடியாக அதிகரித்துள்ளது குறித்து...
மேட்டூா் அணைக்கு செவ்வாய்க்கிழமை மாலை நீா்வரத்து வினாடிக்கு 3720 கனஅடிவீதம் வந்து கொண்டிருந்த நிலையில், புதன்கிழமை காலை வினாடிக்கு 3,722 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீா்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் 60.55 அடியிலிருந்து 60.75 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 25.24 டி.எம்.சி.யாக உள்ளது.