FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நவ. 19-இல் வங்கக் கடலில் உருவாகிறதா 'அக்வான்' புயல்?

வங்கக் கடலில் வரும் நவ. 19-இல் அக்வான் புயல் உருவாவது குறித்து...

நவ. 19-இல் வங்கக் கடலில் உருவாகிறதா 'அக்வான்' புயல்? - பிரதிப் படம்
பகிர்:

வங்கக் கடலில் வரும் நவ. 19-ஆம் தேதிக்கு பிறகு புயல் உருவாகுமேயானால் அக்வான் எனப் பெயரிடப்படும்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வியாழக்கிழமை (நவ. 12) மத்திய அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவியது. இதன் தாக்கத்தால் வெள்ளிக்கிழமை (நவ.13) தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இது சனிக்கிழமை (நவ.14) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், நவ.15-இல் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

இது, மேலும் வலுப்பெற்று நவ. 19 முதல் நவ. 25-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் புயலாக உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. புயல் உருவாகுமேயானால், இந்த புதிய புயலுக்கு ஈரான் பரிந்துரைத்துள்ள 'அக்வான்' என பெயரிடப்படும். அக்வான் என்றால் 'அசுரன்' என்று பொருள்.

இந்தப் புயல் சின்னம் நகரும் திசை மற்றும் கரையைக் கடக்கும் பகுதியைப் பொருத்தே தமிழகத்தில் மழை பாதிப்பு இருக்கும்.

summary

Will Cyclone 'Akvan' form in the Bay of Bengal on Nov. 19?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.