FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுரை நகைக்கடை கொள்ளை: மீனாட்சியை அழைத்துச் சென்று விசாரணை! நகைகள் மீட்பு!

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் சிக்கிய இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியை மாடக்குளம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை...

கைதான மீனாட்சியை அழைத்துச் சென்று விசாரணை - DIN
பகிர்:

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் சிக்கிய இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியை மாடக்குளம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு புதைக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்ட நகைக் கடையில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் நகைகளைக் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி நிஷாந்த் தலைமறைவான நிலையில் நிஷாந்தின் தந்தை சுரேஷ், நிஷாந்தின் தோழி மீனாட்சி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான நிஷாந்தைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதையடுத்து மதுரை மாநகர காவல் தெற்கு துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையிலான போலீசார் விசாரணைக்காக, இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியை மாடக்குளம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அவர் அளித்த தகவலின் பேரில் அப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை பத்திரமாக போலீசார் மீட்டுள்ளனர்.

நிஷாந்த் கொள்ளையடித்த நகைகளை தனது தோழி மீனாட்சி மற்றும் தந்தை சுரேஷ் ஆகியோரிடம் கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், மாடக்குளம் பகுதியில் உள்ள வயல்வெளி மற்றும் காட்டுப்பகுதியில் நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே சுமார் 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் எஞ்சிய 15 கிலோ நகைகளும் மீட்கப்பட்டுளளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Madurai jewellery shop robbery: Arrested Meenakshi taken in for investigation; jewellery recovered

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.