FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!

திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது பற்றி...

24 வினாடிகள் முன்பு
முதல்வா் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

திமுக ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

“தமிழ்நாடு முதலமைச்சர் 02.09.2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் கண்டறிப்பட்டன.

அவற்றைத் திரும்ப பெற உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்து இவ்வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட சுமார் 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வழக்குகளில் இருந்து விடுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Cases filed during the DMK regime quashed! 92,000 farmers and teachers exonerated!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.