FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அக்வான் புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை! மழை பெய்யுமா?

அக்வான் புயல் தொடர்பான வானிலை முன்னறிவிப்பு பற்றி...

57 வினாடிகள் முன்பு
அக்வால் புயல் சின்னம் - Photo: X | Pradeep John
பகிர்:

வங்கக் கடலில் உருவாகவுள்ள அக்வான் புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை என்று தனியார் வானிலை ஆய்வாளரும், தமிழ்நாடு அரசின் எல்-நினோ நிபுணர் குழு உறுப்பினருமான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று மாலை புயலாக வலுப்பெறவுள்ளது. இது படிப்படியாக வலுவடைந்து அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த புயல் சின்னம் உருவானதிலிருந்தே எந்த பகுதியில் கரையைக் கடக்கும் என்று உறுதியாக கணிக்க முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலையில், பிரதீப் ஜான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”வட ஆந்திரம்/ஒடிசா முதல் தெற்கு ஆந்திரம் வரை பல்வேறு கணிப்புகள் இருந்தாலும், நம் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வதே நல்லது. ‘அர்னாப்’ மற்றும் ‘முரசு’ புயல்கள் போலவே, இந்த புயல் சின்னமும் ஆந்திரம் நோக்கிச் செல்லக்கூடும் என்று தோன்றுகிறது.

இந்த புயல் சின்னம் ஆந்திரத்தை நோக்கிச் சென்றாலும், 19ஆம் தேதி சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 'முரசு' புயலின்போது பெய்த மழையே கிடைத்தாலும், அது சென்னைக்கு நல்ல விஷயம்தான். ஆனால், இந்த புயல் சின்னம் மசூலிப்பட்டினம் அல்லது காக்கிநாடா பகுதியை நோக்கி நகர்ந்தால், சென்னைக்குக் கிடைக்கக்கூடிய அந்த மழை வாய்ப்பும் இல்லாமல் போகலாம்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள்

நெல்லூர் மற்றும் அதற்குத் தெற்கே புயல் கரையைக் கடந்தால் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இந்தத் தடம் அமைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

நெல்லூருக்கு வடக்கே, மசூலிப்பட்டினம் / காக்கிநாடாவைக் கடந்தால், நமக்குக் கனமழை கிடைக்காமல், இயல்பான மழை மட்டுமே கிடைக்கக்கூடும். தற்போதைய நிலவரப்படி, இந்தச் சூழல் ஏற்படுவதற்கே அதிக வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

No impact on Chennai from Cyclone 'Akwan'! Will it rain?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.