FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காவல் நிலையம் செல்ல தேவையில்லை... ஆன்லைனில் இ-சிஎஸ்ஆர் பெற புதிய வசதி!

பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, மின்னணு சமூக சேவைப் பதிவேடு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதைப் பற்றி...

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால்.
பகிர்:

பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, மின்னணு சமூக சேவைப் பதிவேடு ரசீதைப் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு செல்லாமலேயே இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (இ.சி.எஸ்.ஆர்) ரசீதைப் பெறும் புதிய வசதியை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் இன்று (நவ. 18) அறிமுகப்படுத்த உள்ளார்.

Advertisement

Advertisement

வழக்கமாகப் பொதுமக்கள் ஏதேனும் புகார் அளித்தால், காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சி.எஸ்.ஆர் (CSR) எனப்படும் சமூக சேவைப் பதிவேடு ரசீதைப் பெற வேண்டிய சூழல் இருந்து வந்தது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த 'e-CSR' திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தபடியே ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்து, உடனடியாக மின்னணு ரசீதைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தச் சேவை www.police.tn.gov.in என்ற இணையம் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும்.

இதன் மூலம் பொதுமக்களின் அலைச்சல் மற்றும் நேரம் மிச்சமாவதுடன், புகார்கள் மீதான நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடனும் விரைவாகவும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Residents of Tamil Nadu will soon be able to file police complaints online and obtain an Electronic Community Service Register (e-CSR) receipt without having to visit a police station in person.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.