FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கிழக்குக் காற்று வருகை: இந்த முறை சென்னைக்கு மழை நிச்சயம்!

கிழக்குக் காற்று வருகையால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

மழை - கோப்புப்படம்
பகிர்:

கிழக்குக் காற்று வருகையால், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையானது தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, வங்கக் கடலில் கடந்த அக்டோபா் இறுதியில் உருவான ‘அர்னாப்’ மற்றும் ‘முரசு’ ஆகிய இரு புயல்களும் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தன.

இதனைத் தொடர்ந்து, தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.16) உருவான அக்வான் புயல் நாளை (நவ. 20) நசரப்பூர் மற்றும் புரி இடையே கரையைக் கடக்கவுள்ளது.

Advertisement

Advertisement

இதனால், சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.

இந்த நிலையில், சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக வரும் 23 ஆம் தேதியில் கிழக்குக் காற்று வருகையில் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்

வங்கக்கடலில் இருந்து வரும் ஈரப்பதமான கிழக்குக் காற்று, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், தமிழகத்துக்கும் பிற கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் மழையை தரும்.

இது தொடர்பாக, ஹேமச்சந்தர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நவ. 23 ஆம் தேதி உருவாகக் கூடும். இந்தத் தாழ்வு நிலை ஈரப்பதமான கீழைக்காற்றை தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் நவ. 23 ஆம் முதல் கொண்டு வரும்.

நவ. 23 முதல் 26 வரை 4 நாள்களுக்கு வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் பரவலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நவ. 24, 25, 26 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

summary

With the arrival of easterly winds, the Northeast Monsoon is expected to intensify in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.