✕
முகப்பு

வி.எஸ். பாபு மறைவு: காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்வு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் 6-ஆக உயர்ந்தது குறித்து...

10 வினாடிகள் முன்பு
வி.எஸ். பாபு - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் 6-ஆக உயர்ந்தது.

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் 70 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் 2.24 மணியளவில் வி.எஸ். பாபு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

வி.எஸ். பாபு மறைந்ததையடுத்து, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜிநாமா செய்தார்.

தொடர்ந்து, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 6 தொகுதிகளின் அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்து, தவெகவில் இணைந்தனர்.

மொத்தம் 7 தொகுதிகள் காலியான நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது. தவெக எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 107-லிருந்து 109-ஆக உயர்ந்தது.

மீதமுள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளில் இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானதையடுத்து கொளத்தூர் தொகுதியுடன் சேர்த்து காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. மேலும், தவெக எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 108-ஆக குறைந்தது.

summary

Number of vacant assembly constituencies in Tamil Nadu rises to 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.