முகப்பு

தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம்(நவ.23)!

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (நவ.23) ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் பற்றி...

16 வினாடிகள் முன்பு
தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம்(நவ.23)!
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்
பகிர்:

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (நவ.23) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

இதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.165 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,495-க்கும், சவரனுக்கு ரூ.1,320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.

அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று வாரத் தொடக்கத்திலேயே கணிசமான உயர்வைப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.