முகப்பு

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

திருப்பரங்குன்றம் கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தது குறித்து...

51 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!
கைது செய்து வாகனத்தில் ஏற்றப்படும் போராட்டக்காரர்கள் - படம் | பிடிஐ
பகிர்:

திருப்பரங்குன்றம் கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து தவெக அரசுக்கு எதிராகவும் காவல் துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பிய இந்து அமைப்பினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அங்கு தீபம் ஏற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் ம்எழுந்திருந்தது.

Advertisement

Advertisement

ஆனால், வழக்கமாக மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தின் மேல் பகுதியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனைக் கண்டித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கோயில் கிரிவலப் பாதை அருகே முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கலந்துசெல்லுமாறு அறிவுறுத்தியும் கேட்காததால், அவர்களை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

summary

Protesters in Tirupparankundram arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.