முகப்பு

அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலை

அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை தவெக அரசு நிகழ்த்தியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளது குறித்து...

அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலை
முதல்வர் விஜய் | அண்ணாமலை - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை தவெக அரசு நிகழ்த்தியுள்ளதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை (நவ. 24) தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக மகா தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதே தவிர, தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு.

நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் விஜய்யை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது.

இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் விஜய்க்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

summary

Annamalai, leader of the 'We The Leaders' organization, stated on Tuesday (Nov. 24) that the TVK government has committed an indelible historical error regarding the 'Deepam' (lamp) issue at Tirupparankundram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.