முகப்பு

கிணற்றைக் காணவில்லை; ஆக்கிரமித்த காவல்துறை அதிகாரி மீது பொதுமக்கள் புகார்!

அரசு பொதுக் கிணற்றைக் காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளது குறித்து...

6 வினாடிகள் முன்பு
கிணற்றைக் காணவில்லை; ஆக்கிரமித்த காவல்துறை அதிகாரி மீது பொதுமக்கள் புகார்!
விசாரணையில் காவல்துறையினர் - படம் - தினமணி
பகிர்:

அரசு பொதுக் கிணற்றைக் காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

திருவள்ளூர், செங்குன்றம் அருகே விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிமா நகர் பகுதியில், அரசுக்குச் சொந்தமான பொதுக் கிணறு மணல் கொட்டப்பட்டு மூடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மல்லிமா நகர் பகுதியில் அரசு மெய்க்கால் புறம்போக்கு நிலத்தில் சுமார் 200 சதுர அடி பரப்பளவிலும், 20 அடி ஆழத்திலும் அமைந்திருந்த பொதுக் கிணறு, அப்பகுதி மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அதிகாலை அப்பகுதி மக்கள் கிணற்றைப் பார்ப்பதற்குச் சென்றபோது, கிணறு முழுவதுமாக ரபீஸ் மணல் கொட்டப்பட்டு மூடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, பொதுக் கிணறு ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதாகக் கூறி, மல்லிமா நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் விளாங்காடுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினரும், கிராம நிர்வாக அலுவலரும் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த காவல்துறையில் பணிபுரியும் குமார் என்பவர் கிணற்றை முழுமையாக மூடியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளாங்காடுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதே இடத்தில் மீண்டும் பொதுக் கிணற்றை அமைத்துத் தர தமிழக அரசிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டிலும் காவல்துறையில் பணிபுரியும் குமார் என்பவர் மீது அரசு சுடுகாடு நிலத்தை ஆக்கிரமித்ததாகப் புகார் அளிக்கப்பட்டு, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் நிலுவையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுக்குச் சொந்தமான பொதுக் கிணறு மூடப்பட்ட சம்பவம் விளாங்காடுப்பாக்கம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த கிணற்றை மீட்டெடுத்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

summary

Members of the public have lodged a complaint stating that a public well owned by the government is missing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.