முகப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நாளை விசாரணைக்கு வருகிறது நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை (நவ. 27) விசாரணைக்கு வருவது குறித்து...

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நாளை விசாரணைக்கு வருகிறது நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள்!
திருப்பரங்குன்றம் மலையில் உச்சிபிள்ளையார் கோவில் ஏற்றப்பட்ட மகா தீபம் - கோப்புப் படம்
பகிர்:

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை உச்சநீதிமன்றம் நாளை (நவ. 27) விசாரிக்கவுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. இருப்பினும், வழக்கம்போல் உச்சி பிள்ளையார் கோவிலிலேயே தீபமேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி தவெக அரசுக்கு எதிராக 3 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இதனிடையே, தீபமேற்றும் இடத்தை தீபத் தூணில் மாற்ற வலியுறுத்தி ராம ரவிக்குமார் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான 3 மனுக்களும், ஓர் இடையீட்டு மனுவும் உச்சநீதிமன்றத்தில் நாளை (நவ. 27) விசாரணைக்கு வரவிருக்கிறது.

summary

Contempt of court petitions regarding the Tirupparankundram deepam issue will come up for hearing tomorrow (Nov. 27)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.