முகப்பு

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 27) ஒரே நாளில் காலை மற்றும் மாலை என இரண்டு முறை உயர்ந்திருப்பது பற்றி....

9 வினாடிகள் முன்பு
தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு!
தங்கம் விலை நிலவரம் - IANS
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 27) ஒரே நாளில் காலை மற்றும் மாலை என இரண்டு முறை உயர்ந்து, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,600-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

காலையிலேயே விலை உயர்ந்திருந்த நிலையில், மாலை நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் விலை கடுமையாக உயர்ந்தது.

Advertisement

Advertisement

மாலையில் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,770-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,160-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,840 அதிகரித்து, ரூ.94,000-ஐத் தாண்டியிருப்பது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் தங்கம் விலை காலை மற்றும் மாலை என இரண்டு முறை உயர்ந்து சவரன் ரூ.94,000-ஐக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

summary

The price of ornamental gold in Chennai has risen twice in a single day—in the morning and in the evening today (Nov. 27), giving a shock to the public.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.