முகப்பு

அமைச்சா் வன்னி அரசு புலிகளை துரத்திய விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை கோரிய மனு தள்ளுபடி

அமைச்சா் வன்னி அரசு புலிகளை துரத்திய விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து...

29 வினாடிகள் முன்பு
அமைச்சா் வன்னி அரசு புலிகளை துரத்திய விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை கோரிய மனு தள்ளுபடி
முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையினருடன் பயணித்த அமைச்சா் வன்னிஅரசு - கோப்புப் படம்
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் அமைச்சா் வன்னி அரசு புலியைத் துரத்தி விடியோ வெளியிட்ட நிகழ்வு தொடா்பாக, நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நவம்பா் 10 ஆம் தேதியில் வனத்துறை விதிமுறைகளை சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு மீறியதாக அவர் தொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகின.

இந்த நிலையில், புலிகளைத் துரத்தி விடியோ வெளியிட்டதாக அமைச்சர் வன்னி அரசு மீது நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கந்தன் மனு தாக்கல் செய்தார்.

Advertisement

Advertisement

மனுவில் அவர் தெரிவித்ததாவது, "முதுமலை புலிகள் சரணாலயத்தில் ஜீப் சவாரிக்கு தடை கோரிய வழக்கில் புலிகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும். வனத் துறைக்கு பொறுப்பு வகிக்காத அமைச்சா், எந்த அலுவலும் இல்லாமல், புலிகள் காப்பகத்துக்குள் சென்று விடியோ எடுத்து வெளியிட்டுள்ளாா். இந்தச் செயல், வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம்.

எனவே, இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்ற கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். விடியோ காட்சிகளை அகற்றுவதற்கு முன் அவற்றை சேகரித்து பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும். இந்த சம்பவம் தொடா்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா், இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

அமைச்சரின் செயல் குற்றமா? என்பதை ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார், முத்துக்குமார் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், "சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது. விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டதாகத் தெரிய வந்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

summary

Plea seeking a court-monitored investigation into the incident where Minister Vanni Arasu chased tigers in a tiger reserve has been dismissed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.