கோவையில் பறவைக் காய்ச்சல்: முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கோவையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது குறித்து...

கோவை: கோவையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த 18 ஆம் தேதி கோவை சித்தாபுதூர் பி.கே.ஆர். நகரில் ஓடைக்கு அருகே 14 குளத்து நாரைகள் இறந்து கிடந்தது. வனத்துறையினர் இறந்த நாரைகளின் உடல்களை சேகரித்து, முழுப் பறவை மாதிரிகளையும் பறவைக் காய்ச்சல் பரிசோதனைக்காக போபாலில் உள்ள தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வகத்துக்கு அனுப்பினர். அதில் பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட பகுதியில் தேவையான உயிரியல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மேலும், நாரைகள் இறந்து கிடந்த இடத்தை சுற்றி 1 கி.மீ. தொலைவிற்கு எந்தக் கோழிப் பண்ணையும் இல்லை என்பதும், எந்தக் கோழி இறப்பும் பதிவு செய்யப்படவில்லை.
எனினும், கோவை மாவட்டத்தில் உள்ள பிராய்லர் கோழிப் பண்ணையாளர்களுக்கு சங்கங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான வகையில் கோழிகள் இறப்பு இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கோழிப் பண்ணையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தை அடுத்த தமிழக - கேரள எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளிலும் சிறப்புக் கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையினரும் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனங்களில் கிருமிநாசின தெளிக்கப்படுகிறது.