FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! தமிழ்நாட்டில் பாஜகவின் வகுப்புவாத அரசியல்: சிஜேபி

தமிழ்நாட்டில் வகுப்புவாத அரசியலை பாஜக உருவாக்குவதாக சிஜேபி கூறியது குறித்து...

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! தமிழ்நாட்டில் பாஜகவின் வகுப்புவாத அரசியல்: சிஜேபி
சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழகத்தில் வகுப்புவாதத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு முயல்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள கல் தூணில் இன்று (நவ. 28) தீபமேற்றப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து சிஜேபி தலைவர் கூறியதாவது, "மத நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்டவற்றை அடிப்படையான சமூகத்தின் மதிப்புகளாக தமிழர்கள் கருதுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இந்து - முஸ்லிம் இடையில் வகுப்புவாதத்தை உண்டாக்க பிரதமரின் கட்சி (பாஜக) முயற்சிப்பது வருத்தத்தையும் கோபத்தையும் உண்டாக்குகிறது.

Advertisement

Advertisement

அதே சமயம், உச்ச நீதிமன்றமும் அதன் நிலைகளைத் தாண்டி (திருப்பரங்குன்றம் விவகாரத்தில்) உத்தரவிட்டிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. உண்மையில், ஓர் அமைதியான மற்றும் மற்றும் மகிழ்ச்சியான மாநிலம் தீக்கிரையாக்கப்படுகிறது.

பாஜகவின் மலிவான வகுப்புவாத அரசியலை முழு பலத்துடன் எதிர்க்குமாறு என் தமிழ் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை உள்பட பல பிரச்னைகள் இருக்கும் நிலையில், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக வகுப்புவாதத்தின் மூலம் தமிழ்ச் சமூகத்தைப் பிரிக்க பிரதமரின் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இரு குஜராத்திகள் அல்லது தில்லியின் கட்டளைக்கு தமிழ்நாடு செயல்படும் சூழல் ஏற்படக் கூடாது" என்று சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.

summary

Tirupparankundram Deepam Issue: BJP is engaging in communal politics in Tamil Nadu, says CJP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.