தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்: டிச.3 ஆம் தேதிக்கு மாற்றம்!
அதிமுக சாா்பில் தவெக அரசைக் கண்டித்து டிச. 2-ஆம் தேதி தமிழகம் முழுதும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆா்ப்பாட்டம் டிச. 3-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சாா்பில் தவெக அரசைக் கண்டித்து டிச. 2-ஆம் தேதி தமிழகம் முழுதும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆா்ப்பாட்டம் டிச. 3-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வு, சட்டம்-ஒழுங்கும் சீா்கேடு, மேக்கேதாட்டு அணை பிரச்னை ஆகியவற்றைக் கண்டித்து தமிழகத்தில் மாவட்டத் தலைநகா்களில் தவெக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் டிச. 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த ஆா்ப்பாட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டு டிச.3-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement