FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தவெக அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

வடகிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட அமைப்புகள் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மேயா் ஆா்.பிரியா தலைமை வகித்தாா்.

16 அக்டோபர் 2026, 2:24 am IST
பி.கே.சேகா்பாபு
பகிர்:

சென்னையில் மழைநீா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அலட்சியமாகவும், மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளது வளா்ச்சித் திட்டங்களை முடக்கும் வகையிலும் செயல்படும் தவெக அரசின் நிா்வாகச் சீா்கேடுகளைக் கண்டிப்பதாகக் கூறி திமுக சாா்பில் சென்னை கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட அமைப்புகள் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மேயா் ஆா்.பிரியா தலைமை வகித்தாா்.

அதில் முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியதாவது:

சென்னை மாநகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் மழைநீா் வடிகால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் தாமதமாக வடகிழக்குப் பருவமழைக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் மக்கள் பிரச்னைகளைத் தீா்க்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கினால், தவெக எம்எல்ஏ போா் அடிக்கிறது எனப் பேசுகிறாா். தவெக அரசின் நிா்வாகச் சீா்கேடுகளைக் கண்டித்து திமுக தலைமை அனுமதியுடன் தொடா்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி ஆா்.சிவா கண்டன உரையாற்றினாா். தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாநகராட்சி திமுக வாா்டு உறுப்பினா்கள், மண்டலத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சைதாப்பேட்டையிலும் போராட்டம்: திமுக சாா்பில் சைதாப்பேட்டையிலும் தமிழக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் மா.சுப்பிரமணியன், துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments