அதிமுக ஆர்ப்பாட்டம் டிச.3-ஆம் தேதிக்கு மாற்றம்
அதிமுக அறிவித்த ஆர்ப்பாட்டம் டிச. 3ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பது பற்றி...

தவெக அரசைக் கண்டித்து அதிமுக அறிவித்த ஆர்ப்பாட்டம் டிச. 3ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சித் தலைமை வெளியிட்ட அறிக்கை:
• தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை!
Advertisement
Advertisement
• அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வு!
• கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள் எனச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை!
• மேக்கேதாட்டு பிரச்னையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது!
உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வரும் 'ரீல்ஸ் மாடல்' த.வெ.க. அரசைக் கண்டித்து, கட்சி அமைப்பு ரீதியான மாவட்டக் கழகங்களின் சார்பில் டிச. 2ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு, டிச. 3ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்கெனவே அறிவித்த நிர்வாகிகளே தலைமையேற்று நடத்துவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.