பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா
பாஜகவிடம் திமுக சரணடைந்துவிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளது குறித்து...

பாஜகவிடம் திமுக சரணடைந்துவிட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (நவ. 29) விமர்சித்தார்.
சென்னை பெரியமேட்டில் தவெக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுகவை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
திமுகவின் சட்டப்பேரவை தீர்மானம் வேறு இன்றைய நிலைப்பாடு வேறு. பாஜகவின் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு அளித்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. முதல்வர் ஒரு தீர்க்கதரிசி, என்ன நடக்கும் என்பதை 6 மாதங்களுக்கு முன்பே கூறினார்.
Advertisement
Advertisement
திமுக - பாஜக ரகசிய கூட்டணி என்று 6 மாதங்களுக்கு முன்பே கூறியவர் நம் முதல்வர் விஜய். பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக. இது இப்போது வெளிப்படையாகவே தெரிகிறது என ஆதவ் அர்ஜுனா பேசினார்.
summary