முகப்பு

நாட்டின் முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு முக்கியம்: வானதி சீனிவாசன்

நாட்டின் முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியது குறித்து...

41 வினாடிகள் முன்பு
நாட்டின் முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு முக்கியம்: வானதி சீனிவாசன்
செய்தியாளர்களுடன் பேசிய வானதி சீனிவாசன் - ANI
பகிர்:

நாட்டின் முக்கிய முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் வானதி சீனிவாசன் பேசியதாவது, "காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே இப்போது திமுகவினரை நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டை மாற்றும் என நான் நினைக்கவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த துரோகத்தை திமுக இன்னும் நினைவில் வைத்துள்ளது என நினைக்கிறேன்.

Advertisement

Advertisement

நாடாளுமன்றத்தில் இதுவரையில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. மக்கள்தொகையில் 50 சதவிகிதம் பெண்கள் இருக்கும் நாட்டில் எடுக்கப்படும் முடிவுகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியத்துவம் பெற வேண்டும்" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

summary

Women's participation in the nation's decision-making must be given importance, says BJP Leader Vanathi Srinivasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.