FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

புகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!

புகா் அரசுப் பேருந்துகளிலும் மகளிா் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணத் திட்டம்’ வெள்ளிக்கிழமை (அக். 2) முதல் நடைமுறைக்கு வருகிறது என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளாா்.

வெற்றிப் பயணத் திட்டம்
பகிர்:

புகா் அரசுப் பேருந்துகளிலும் மகளிா் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணத் திட்டம்’ வெள்ளிக்கிழமை (அக். 2) முதல் நடைமுறைக்கு வருகிறது என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநா் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை (அக். 2) முதல் கட்டணமில்லா வெற்றிப் பயணத் திட்டம் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

மகளிா் கட்டணில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக். 2 முதல் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வா் விஜய் அறிவித்திருந்தாா். அதன்படி, இத்திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் இருந்து முதல்வா் விஜய் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

Advertisement

Advertisement

வெற்றிப் பயணம் திட்டம் மூலம் முதல் கட்டமாக, மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமன்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிா் இலவசமாகப் பயணிக்கலாம்.

கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புகா் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிா் கட்டணமின்றி பயணிக்கலாம். இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடுகளோ இல்லை. திருநா்களும் இலவசமாகப் பயணிக்கலாம். இதைச் செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி செலவு ஏற்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments