FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கிரேட் 3 தசைநார் கிழிவு... இறுதிப் போட்டியில் பதக்கத்தை இழந்த தமிழக வீராங்கனையின் பதிவு!

தமிழக வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் பகிர்ந்த இன்ஸ்டா பதிவு குறித்து...

தமிழக வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் - படங்கள்: இன்ஸ்டா / கிருஷ்ணா ஜெயசங்கர்
பகிர்:

தமிழக குண்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் (23 வயது) ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்தது குறித்து தன்னம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை இந்தியாவுக்கு 75 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

குண்டு எறிதலில் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் இரண்டு இந்திய வீராங்கனைகள் பங்கேற்றார்கள். அதில் மன்ப்ரீத் கௌர் 17.17 மீட்டருக்கு குண்டு எறிந்து, மூன்றாமிடம் வந்ததால் வெண்கலம் வென்றார்.

Advertisement

Advertisement

தமிழக வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் 16.57 மீட்டருக்கு குண்டு எறிந்து ஐந்தாம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

9 மாதங்கள், 15 போட்டிகள். கிரேட் 3 தசைநார் கிழிவு. பந்து எறியும் கையில் சுளுக்கு. இருப்பினும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஐந்தாவது இடம்.

நான் கனவு கண்டபடி நடைபெறவில்லை. ஆனால், எனக்காக ஆதரவு தெரிவித்த, வேண்டிக்கொண்ட மற்றும் என்னை நம்பிய ஒவ்வொருவருக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். எல்லா புகழும் இறைவனுக்கே.

இந்த அத்தியாயம் முடிவடைந்தது. ஆனால், கதை இன்னும் முடிவடையவிலை. வலுவாகவும் பசியுடனும் இருக்கிறேன். இன்னும் சிறப்பாக வருவேன். முடிக்கப்படாமல் இருக்கின்றது. 2027ல் பார்க்கலாம். கம்பேக் இப்போதே தொடர்கிறது என தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

summary

Grade 3 muscle tear, sprained arm... A post by the Tamil Nadu athlete Krishna Jayasankar who lost her chance at a medal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments