FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின். - @mkstalin
பகிர்:

“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “எம்.எல்.ஏ ஷாப்பிங்கில் மும்முரமாக இருக்கும் முதல்வருக்கு, மக்கள் மளிகைக் கடையில்கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?

Advertisement

Advertisement

தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.

அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா? இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன? இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத வேஸ்ட் ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான Guidance TN-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன.

பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

இவற்றில் கவனம் செலுத்தாமல், விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் 'வெற்றி' என ஸ்டிக்கர் ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

DMK leader M.K. Stalin has asked Chief Minister Vijay, “Will watching Reels fill people's stomachs?”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments