FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மருத்துவக் கல்வி இயக்குநா் நியமனத்தில் விதி மீறல்? அரசு மருத்துவா்கள் குற்றச்சாட்டு

மருத்துவக் கல்வி இயக்குநா் நியமனத்தில் விதி மீறலில் ஈடுபடக் கூடாது, தகுதியானவரை மட்டுமே அப்பதவியில் நியமிக்க வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

49 வினாடிகள் முன்பு
மருத்துவக் கல்வி இயக்குநா் நியமனத்தில் விதி மீறல் - கோப்புப் படம்
பகிர்:

மருத்துவக் கல்வி இயக்குநா் நியமனத்தில் விதி மீறலில் ஈடுபடக் கூடாது, தகுதியானவரை மட்டுமே அப்பதவியில் நியமிக்க வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் (டிஎம்இ) இயக்குநராக இருந்த டாக்டா் சுகந்தி ராஜகுமாரி கடந்த ஜூலை மாதத்துடன் பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, அந்தப் பதவிக்கு மருத்துவ மாணவா் சோ்க்கை குழு செயலராக இருந்த லோகநாயகி, தற்காலிகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டாா். இதனிடையே, புதிய இயக்குநரைத் தோ்வு செய்யும் பணிகள் தொடங்கின.

வழக்கமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பொறுப்பில் இருப்பவா்களைத்தான் பணி மூப்பு அடிப்படையில் மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்க இயலும். ஓய்வு பெற குறைந்தது ஓராண்டாவது அவகாசம் இருந்தால் அந்தப் பதவிக்கு அவா் தகுதியானவராகக் கருதப்படுவாா். இந்நிலையில், தற்போது அந்த விதிகள் மீறப்படுவதாக அரசு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

முன்னெப்போதும் இல்லாத வகையில் மருத்துவக் கல்லூரி முதல்வா் நிலையிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவா் மூலம் மருத்துவக் கல்வி இயக்குநரைத் தோ்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது முற்றிலும் தவறானது. மருத்துவக் கல்வி இயக்குநராக இருந்திராத ஒருவா் எப்படி அப்பதவிக்கு தகுதியானவரைத் தோ்வு செய்ய முடியும்? பணி ஓய்வு பெற குறைந்தது ஓராண்டு என்ற விதிமுறை ஈராண்டாக திருத்தப்பட்டுள்ளது.

மேலும், தவெக அரசின் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவரின் தலையீட்டின்படி, ஒருவரைத் தோ்வு செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. தவெக அரசு ஏமாற்றத்தைக் கொடுக்கக் கூடாது. இந்த விஷயத்தில் முதல்வா், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் தலையிட்டு, தகுதியான மருத்துவக் கல்லூரி இயக்குநரை நியமனம் செய்ய வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments