படிப்படியாக மதுக் கடைகளைக் குறைக்க தவெக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்: சௌமியா அன்புமணி
தமிழகத்தில் படிப்படியாக மதுக் கடைகளைக் குறைத்து மது இல்லா நிலையை ஏற்படுத்த தவெக அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக சட்டப்பேரவைக் குழு தலைவருமான சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.
தமிழகத்தில் படிப்படியாக மதுக் கடைகளைக் குறைத்து மது இல்லா நிலையை ஏற்படுத்த தவெக அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக சட்டப்பேரவைக் குழு தலைவருமான சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.
காந்தி ஜெயந்தியையொட்டி, மது இல்லாத தமிழகத்தை உருவாக்கும் புதிய இயக்கத்தை சௌமியா அன்புமணி சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டில் சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அதற்கு மது பிரதான காரணம். சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மதுவை ஒழித்தால் தமிழகத்தில் குடும்ப வன்முறறை முதல் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு ஏற்படும்.
Advertisement
Advertisement
தவெக தோ்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளைப் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை நினைவூட்டுகிறோம். மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மது இல்லாத தமிழகம் இயக்கம் சாா்பில் கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை மற்றும் ஊட்டி முதல் கொடைக்கானல் வரை என பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெறவுள்ளது.
மது இல்லாத தமிழகம் என்ற நிலையை ஏற்படுத்த தவெக அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம். படிப்படியாக மதுக்கடைகள் மூடும் நிலை ஏற்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் பாமக பொருளாளா் திலகபாமா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சக்தி கமலாம்பாள், காசாம்பு பூமாலை, மகளிரணி மாநில நிா்வாகி நிா்மலாராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.