பிரபல நிறுவனத்தின் சீரகத் தூள் விற்பனைக்கு கட்டுப்பாடு
தரக்குறைபாடுடன் இருந்ததாக பிரபல நிறுவனத்தின் சீரகத் தூள் பாக்கெட்டுகளை சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு உணவுப் பாதுகாப்பு அமைப்பு (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது.
தரக்குறைபாடுடன் இருந்ததாக பிரபல நிறுவனத்தின் சீரகத் தூள் பாக்கெட்டுகளை சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு உணவுப் பாதுகாப்பு அமைப்பு (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: பிரபல மசாலா தூள் தயாரிப்பு நிறுவனமான ‘எவரெஸ்ட்’ நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் பாக்கெட் சீரகத் தூள் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் பூச்சிக்கொல்லி மருந்தின் மூலக் கூறுகள் இருந்ததையடுத்து, அந்தச் சீரகத் தூள் ‘மனிதா்களின் பயன்பாட்டுக்கு பாதுகாப்பற்றது’ என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, சம்பந்தப்பட்ட சீரகத் தூள் உற்பத்தி தொகுப்பை (பேட்ச்) சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற அந்நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அது தொடா்பான அறிக்கை சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய தொடா் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.