வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
வெற்றி பயணத் திட்டத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து...
வெற்றி பயணத் திட்டத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய வகை செய்யும், வெற்றிப் பயண திட்டத்தை, அக். 2-ல் முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்.
இந்த நிலையில், முதல்வர் விஜய் தொடக்கி வைத்த இந்தத் திட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோட்டை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, ஈரோட்டில் 2 வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கும் நீங்கள் எப்படி வழக்கு தொடர முடியும்? ஒட்டுமொத்த திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை பொதுநல வழக்காகக் கருத முடியாது என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மனுவை கலாமணி திரும்பப் பெற்றதால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Case against 'Vettri Payanam' plan dismissed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.