FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘அண்ணன் சீா்’ திட்டம்: ரூ.812 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசு சாா்பில் ‘அண்ணன் சீா்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கி அரசாணை....

தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: தமிழக அரசு சாா்பில் ‘அண்ணன் சீா்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தவெகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்று ‘அண்ணன் சீா்’ திட்டம். இந்தத் திட்டம் மூலம் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் (1 பவுன்) மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அரசாணை: திருமணங்களில் மணப்பெண்களுக்கு அரசு அண்ணனாக பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு துணை நிற்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தும் விதமாக ‘அண்ணன் சீா்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின்போது ஒரு பவுன் (8 கிராம்) தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை ஆகியவை வழங்கப்படவுள்ளன. இதற்கான நிகழ் நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்படும். மேலும், தகுதியான ஒப்பந்ததாரா் தோ்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயமும், பட்டுப் புடவையும் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments