ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்
தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலைக் கழகத்துக்கு அனுமதி வழங்கப்படடுள்ளது குறித்து...
தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலைக் கழகத்துக்கு அனுமதி வழங்கப்படடுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் இன்று (அக். 6) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெ. சண்முகம் வெளியிட்டுல்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டின் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமாக மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை (University of Western Australia - UWA) நிறுவ அனுமதி வழங்கப்பட்டு அது வேளச்சேரி பகுதியில் அமையவுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement
Advertisement
அரசு கலைக் கல்லூரிகளில் 7,198 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அடித்தட்டு, நடுத்தட்டு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உயர்கல்வியின் தரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் உள்ளது. இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அரசாங்கங்கள் அயல்நாட்டு பல்கலைக் கழகங்களுக்கு வெண்சாமரம் வீசுவது வேதனைக்குரியது.
மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், தனது இணையதளத்தில் தெரிவித்துள்ள முதல் ஆண்டு கல்விக் கட்டணங்கள் எளிய, நடுத்தர மாணவர்களுக்கு எட்டாத தூரத்தில் உள்ளன.
எம்.பி.ஏ - ரூ. 23.10 லட்சம், செயற்கை நுண்ணறிவு - ரூ. 17.93 லட்சம், வணிக மேலாண்மை - ரூ. 14.52 லட்சம், தரவு அறிவியல் - ரூ. 14.52 லட்சம் என முதல் ஆண்டுக் கல்விக் கட்டணங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தவிர மற்ற கட்டணங்களும் உண்டு. அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் கட்டணங்கள் மீது தலையிட மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பதால் வரம்பற்ற கட்டணக் கொள்ளைக்கே வழிவகுக்கும்.
எனவே, ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, இந்த அனுமதியைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
P. Shanmugam, State Secretary of the Communist Party of India (Marxist), condemned today (Oct. 6) the granting of permission for a foreign university to operate in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.