பிரதமர் மோடியும் ஞானேஷ் குமாரும் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: ஜோதிமணி எம்.பி.
பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சி போராட்டம் நடத்துவது குறித்து...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலகும்வரையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் போராட்டம் தொடரும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.
தில்லியில் தலைமைத் தேர்தலுக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசியதாவது, "எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரின் மீதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இறுதிவரையில் நாங்கள் போராடுவோம்.
ஞானேஷ் குமாரும் பிரதமர் மோடியும் பதவியில் இருந்து விலகும் வரையில் நாங்கள் போராடுவோம். அவர்கள் எங்கள் போராட்டத்தைத் தடுக்கலாம். ஆனால், எங்களின் மனங்களில் பதிந்துள்ள நிலைப்பாடு, கொள்கையை அவர்களால் தடுக்க முடியாது. எங்கள் நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் பின்வாங்குவதாய் இல்லை" எனக் கூறினார்.
Advertisement
Advertisement
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் காங்கிரஸ் தொண்டர்களும் தில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி இன்று பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களை தில்லி காவல்துறையினர் தடுக்க முயன்ற நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி, வலுக்கட்டாயமாக காவல் வாகனத்தில் ஏற்றினர்.
INDIA bloc will ensure Gyanesh Kumar and Narendra Modi are out of office, says Jothimani MP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.