FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பழங்குடியின விடுதி குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை! மு.க. ஸ்டாலின் பெருமிதம்

பழங்குடியின விடுதியில் படித்த மாணவிகள், முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருப்பது குறித்து...

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

பழங்குடியின விடுதியில் படித்த மாணவிகள், முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருப்பது குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையைப் பகிர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க. ஸ்டாலினின் தன்னுடைய சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"நமது திராடவிட மாடல் அரசின் சாதனைகள் பற்றி, நேற்று என் நெஞ்சை நெகிழ வைத்த இரு செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Advertisement

Advertisement

1)   https://www.worldbank.org/en/news/feature/2026/08/17/more-than-a-roof-how-safe-housing-is-unlocking-women-s-path-to-education-and-jobs

2)   https://www.newindianexpress.com/states/tamil-nadu/2026/Oct/06/70-more-tamil-nadu-tribal-teens-enter-top-colleges-in-2026

முதலாவது, தமிழ்நாடு முழுவதும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தோழி விடுதிகள் பற்றி, உலக வங்கி வெளியிட்டுள்ள பாராட்டுக் கட்டுரை.

அதில், “பெண்கள் அதிகம் பணிக்குச் செல்வதை ஊக்குவிப்பதுதான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கும் ஆற்றல்மிக்க வழி. அதற்கு முக்கியத் தடையாக இருப்பது, வாய்ப்புகளைத் தேடி மாநகரங்களுக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்கள் இல்லாததே.

அது தீர்க்கக் கூடிய பிரச்னைதான் என திராவிட மாடல் அரசின் தோழி விடுதிகள் சாதித்துக் காட்டியுள்ளன. இதனை எல்லா மாநிலங்களும் உலக நாடுகளும் விரைவாகப் பின்பற்ற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது, தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் ஐந்தில் ஒருவர், அதாவது 20% பேர், நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர் என்பது.

இது சாதாரணச் சாதனை அல்ல. 2024-25 கல்வியாண்டைவிட, 2025-26 கல்வியாண்டில் 70% பழங்குடியின மாணவர்கள் அதிகமாக NIFT, NIT, National Law University, CIPET உள்ளிட்ட முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேர்வாகியுள்ளனர்.

மேலும், இப்பள்ளிகளில் 2022-இல் 86% இருந்த தேர்ச்சி விழுக்காடு தற்போது 97.33 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, தேர்ச்சி பெற்றவர்களில் 95% மாணவர்கள் உயர்கல்விப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

அரசியல் வேறுபாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வியில் திராவிட மாடல் அரசு செய்துள்ள இந்த மகத்தான புரட்சியைச் சிறிதளவும் சிதைக்காமல் தற்போதைய அரசும் வளர்த்தெடுக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

DMK leader M.K. Stalin has expressed pride while sharing an article published in The New Indian Express about female students from a tribal hostel gaining admission to leading higher education institutions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments