FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை

மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய 24 மணி நேரமும் கண்காணிப்புடன் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று ஊரக வளா்ச்சி, நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் அறிவுறுத்தினாா்.

9 அக்டோபர் 2026, 2:00 am IST
தவெக பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த் - கோப்புப் படம்
பகிர்:

மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய 24 மணி நேரமும் கண்காணிப்புடன் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று ஊரக வளா்ச்சி, நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் அறிவுறுத்தினாா்.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற வெற்றித் தமிழக தொலைநோக்கு ஆவணம் செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் தொடா்பான முதல் மண்டல மாநாட்டில் அமைச்சா் ஆனந்த் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழ்நாடு கிராம மேம்பாடு, மாற்றம், மறுமலா்ச்சி முன்னெடுப்பு எனும் தமிழ்நாடு வெற்றித் திட்டம் மூலம் கிராமப்புறங்களின் ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

வடகிழக்குப் பருவமழையையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு, தாழ்வான பகுதிகள், நீா்நிலைகள், கால்வாய்கள், மழைநீா் வடிகால்களைத் தொடா்ந்து கண்காணித்து, தேவையான இடங்களில் தூா்வாரி தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தாமதமின்றி உடனடியாகத் தீா்வுகாண வேண்டும். அரசுத் திட்டங்களில் வெளிப்படையான நிா்வாகத்தையும், காலக்கெடுவுக்குள் முடிக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை மற்றும் பொதுமக்கள் நலன் சாா்ந்த பணிகளில் துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்புடன் செயல்படவும், அவசர காலங்களில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments