தட்டாஞ்சாவடியில் நோட்டாவைவிட நாம் தமிழர் குறைந்த வாக்குகள்!
தட்டாஞ்சாவடியில் நோட்டாவைவிட நாம் தமிழர் குறைந்த வாக்குகள் பெற்றது பற்றி...

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் நோட்டா பெற்ற வாக்குகளைவிட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 13,358 (61.12%) ஆகும். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் 80.81 சதவிகிதம் ஆகும்.
இரண்டாமிடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் இ. விநாயகம் 4876 வாக்குகளும் (22.31%), மூன்றாமிடம் பிடித்த திமுக வேட்பாளர் சேது என்கிற கு. சேது செல்வம் 2,664 வாக்குகளும் (12.19%), நான்காமிடம் பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு. சலீம் 310 வாக்குகளும் (1.42%) பெற்றனர்.
Advertisement
Advertisement
ஐந்தாவதாக நோட்டாவுக்கு 225 பேர் வாக்களித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்தி குமாரிக்கு 171 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
இந்த தேர்தலில், இரண்டாமிடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளரை தவிர, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், நாதக வேட்பாளர்கள் உள்பட அனைவரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.