✕
முகப்பு

கூத்தாடி! முதல்வரை விமர்சித்த நாதக வழக்குரைஞர் மீதான வழக்கு ரத்து

முதல்வரை விமர்சித்த நாதக வழக்குரைஞர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது குறித்து...

முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வரை விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

முதல்வர் விஜய்யை கூத்தாடி என விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர் மீது அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நாதக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் இந்த மனு மீதான விசாரணையில், "கூத்தாடி என்ற சொல் யாரையும் இழிவுபடுத்தும் சொல் அல்ல, கலைஞர்களைக் குறிக்கும் சொல்தான்" என மனுதாரர் தரப்பில் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, "முதல்வரை அவமதிக்கும் விதமாகவே கூத்தாடி என பேசியுள்ளனர். ஆகையால், வழக்கை ரத்து செய்யக் கூடாது" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், முதல்வரை விமர்சித்ததாக நாதக வழக்குரைஞர் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

summary

Case against Naam Tamilar Katchi lawyer for criticizing the CM Vijay dismissed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.